தனுசு ராசி அன்பர்களே,

இன்று பெரும் முயற்சிக்கு பின்னர் காரியங்களில் வெற்றி ஏற்படும். மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திற்கு நண்பரின் ஆலோசனை உதவும். அளவான பண வரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

எடுத்த பணிகள் சாதகமான போக்கு காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். பெண்கள் இன்று சிந்தனையில் ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபட முடியும். தொலைந்து போன பொருள் கையில் கிடைக்கும். சமையலின் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் பதட்டம் கொள்ள வேண்டாம்.

உயர்கல்வி சிறப்பாக அமையும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் மற்றும் பச்சை நிறம்