மகரம் ராசி அன்பர்களே,

இன்று பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்திற்கு வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். யாரையும் புண்படுத்தாமல் பேசுங்கள். திடீர் கோபத்தை தவிர்க்க வேண்டும்.

அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. இன்று பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.

இன்று மாணவர்களுக்கு தைரியம் கூடிவிடும். மாற்றங்கள் ஏற்படும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்