கும்பம் ராசி அன்பர்களே,

இன்று நன்மைகள் கண்டிப்பாக நடைபெறக்கூடும். அக்கம் பக்கத்தில் ஏற்பட்ட மன கஷ்டங்கள் விலகி செல்லும். எதிர்கால வாழ்வுக்கு புதிய நம்பிக்கை ஏற்படும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான பலம் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். வாய்ப்புகள் ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரக்கூடும். பெண்களுக்கு யோகமான நாளாக அமையும். இந்த இனிய நாளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடும். வெற்றி பெறும் சூழல் சுலபமாக இருக்கிறது.

கல்வியில் முன்னேற வேண்டும் என்ற லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்