துலாம் ராசி அன்பர்களே,

இன்று மனோ தைரியம் கூடும். வருமானம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பதவி மாற்றம் இடமாற்றம் போன்றவற்றை சந்திக்க வேண்டியது இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும்போது கூடுதல் கவனம் கண்டிப்பாக வேண்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி மாற்றம் போன்றவை ஏற்படலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக தீர்ந்துவிடும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கடுமையாக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு சில திட்டங்களால் வெற்றி கிடைக்கும்.

தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முன்னேற்றமும் உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மாற்றங்களும் ஏற்படும். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். உயர்கல்வியில் ஜெயிக்க முடியும். இந்த நாள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்