கன்னி ராசி அன்பர்களே,

இன்று மன தடுமாற்றம் ஏற்பட்டு சரியாகும். நியாயமாக நடக்க முயற்சி செய்யுங்கள். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிவாகை சூடுவீர்கள். லாபம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எந்த செயலிலும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

தடை தாமதம் விலகும். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கூட்டுத் தொழில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். எதிர்காலத்துக்கு வேண்டியவற்றை செய்வீர்கள்.

காசு பணத்தை பத்திரப்படுத்துவீர்கள். இன்று மாணவர்கள் தைரியத்துடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். புதுப்புது முயற்சிகளால் வெற்றி பெற முடியும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 5, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்