சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைவரயும் நட்புடன் நடத்துவீர்கள். சந்திராஷ்டமும் முடியாததால் கவனமாக இருக்கவும். அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வது நல்லது. பணியிடத்தில் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். பண வரவு சீராக இருக்கும்.

புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பேச்சை குறைத்துக் கொண்டு காரியங்களில் ஈடுபடுவது நல்லது. இன்று எந்த செயலிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் இன்று பார்த்து பக்குவமாக பேசுங்கள்.

அக்கம் பக்கத்தில் ஜாக்கிரதையாக பழக வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்