கடகம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு பல வழிகளில் தன லாபம் கிடைக்கும். எல்லா வழியிலும் நன்மை நடக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். மதிப்பு உயர்ந்துவிடும். பிரிந்தவர்கள் ஒன்று கூடி மகிழ்வீர்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது பொறுமை வேண்டும்.

தொழில் வியாபாரம் மந்தமாக தான் காணப்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் இருக்கும். பெண்களுக்கு சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படும். காரியங்கள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இன்று மாணவர்கள் யோசனையுடன் காணப்படுவீர்கள். எது சரி எது தவறு என்று திட்டமிடுவது நல்லது. படிப்பில் அக்கறை கொள்ள வேண்டும். தேர்வுக்காக முயற்சி எடுத்து படியுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்