துலாம் ராசி அன்பர்களே,

இன்று நல்ல விஷயங்கள் இல்லத்தில் நடைபெறும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வீடு தேடி வரும். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத வகையில் வெற்றி ஏற்படும் இறைவன் அருளால் காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதிருப்தி ஏற்படும்.

தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். கடன் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். பெண்கள் இன்று பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி ஏற்படும். சிந்தித்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

இன்று மாணவர்கள் புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர்வான கல்வி அமையும். முயற்சித்தால் கல்வியில் வெற்றி பெறலாம். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: ஒன்று மற்றும் ஏழு
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்