விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்றைய தினம் தயவு செய்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக யோசித்து செயல்படுவது நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். இந்த நாள் உங்களுக்கு எதார்த்தமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தை சரி செய்து கொள்வீர்கள். மன அழுத்தம் விலகும்.

மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். பெண்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்