துலாம் ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் அற்புதமாக நடக்கும். சிரமங்கள் தீரும். பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தோடு இன்ப சுற்றுலாக்கள் சென்று மகிழ்வீர்கள். உறவினர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். எதிரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள்.

தங்களின் பாதுகாப்பில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் உள்ளது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு வெளிப்படும். பெண்கள் அனைவரிடத்திலும் அன்பாக பழகுவீர்கள். கனவுகள் நினைவாக கூடும்.

மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கல்வியில் சாதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணங்கள் வளரும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1, 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்