கன்னி ராசி அன்பர்களே,

இன்று பதட்டமான வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி செல்வீர்கள். மனதை அமைதியுடன் வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் தெளிவாக அணுகி வெற்றி பெற முடியும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள்.

மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும். சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் மெத்தனமான போக்கு காணப்படும். இன்று பெண்களுக்கு முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை அற்புதமாக கையாளுவீர்கள்.

யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட முடியும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்