துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது.

அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 தினங்களுக்கு பின் இடிபாடுகளுக்குள் புதையுண்ட தம்பதியினர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவத்தில் அவர்கள் தன் குழந்தையை இழந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்டு 13 தினங்களுக்கு பின் கணவனும், மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டனர்.