ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வான்வழியாக 2.5 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 16 அன்று நடந்த இந்தத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அவசர மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. இது குறித்துத் தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், “இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் துணையாக நிற்கும்; தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்” என உறுதியளித்துள்ளார்.

“>

 

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்தியாவின் இந்த உதவி சர்வதேச அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.