நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நபருக்கு எதிராக, அவரது தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த பாஸ்கர், வரும் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகத் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

​இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரின் ஆதரவாளர்கள், நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2021 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பாஸ்கருக்கு, இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது எடப்பாடி தரப்பு எடுத்த அதிரடி முடிவு எனக் கூறப்படுகிறது. ஆனால், தனது கோட்டையிலேயே விசுவாசி ஒருவரே எதிராகத் திரும்பியது எடப்பாடி பழனிசாமிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.