வருகிற 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகள், பலகாரம், பட்டாசுகள் தான் முதலில் ஞாபகம் வரும். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் பசுமை பட்டாசுகள் விற்பனை செய்வதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. முறுக்கு அதிரசம் தொகுப்பு 190 ரூபாய் கொடுத்து மக்கள் வாங்கி செல்லலாம். குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.