தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பண்டிகையின் பொழுது கலப்பட இனிப்பு பண்டங்களை கண்டறிந்து அவற்றின் விற்பனையை தடுப்பதற்கு சில்லறை விற்பனையகங்கள் இனிப்பு பண்ட தயாரிப்பு நிறுவனங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று மாநில அளவில் உள்ள 4000 அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.