தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஒரு வருடங்கள் கழித்து தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தேர்வு எழுதிய 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். அதாவது தேர்வர்கள் எழுத்து வடிவில் விடைகளை எழுதியுள்ள நிலையில் விடைத்தாள்களை கணினி வழியில் திருத்தம் செய்வதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .

இதனால் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருப்பதால் அடுத்தடுத்து பணியில் சேர்வதில் அதிக கால தாமதம் ஏற்படுவதால் தேர்வர்களுக்கு நிதிச் சுமை ஏற்படுவதாகவும் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் இருப்பதாகவும் உடனடியாக குரூப்-2 தேர்வு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.