குறைக்கப்பட்ட மின் கட்டணம் இன்று (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது. இந்த புதிய கட்டண கணக்கீடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 3 மாடி மற்றும் அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கும் இது பொருந்தும்.