இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஏற்கனவே ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் விடுபட்ட தொகை 4% அகலவிலைப்படி உயர்வு  நவம்பர் 1ஆம் தேதி சம்பளத்துடன் கூடுதலாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.