இந்த ஆண்டு ஆவின் பால் விற்பனை லாபகரமாக நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 115 கோடி வருமானம் கிடைத்த நிலையில் இந்த வருடம் 149 கோடி அதிகரித்துள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க 300, 500, 900 ரூபாய் கொண்ட காம்போ பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருமானம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த சங்க ஊழியர்களுக்கு இடைக்கால ஊதிய உயர்வு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .அதே சமயம் பால் விற்பனையாளர்களுக்கு லாபம் கிடைக்க செய்யும் வாயில் கொள்முதல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆவின் பால் விலையை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.