
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை செய்திகள் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சம்பளம் கிரெடிட்டாகும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் கூறுகின்றன. மக்களின் பெரும்பாலானவர்கள் இந்த 4 நாட்கள் விடுமுறையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ள நிலையில், சம்பளத்திற்கான அறிவிப்பும் விரைவில் வர வேண்டும் என ஆர்வமுடம் எதிர்பார்க்கின்றனர்.