2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வாக்காளர்களை கவர பல நலத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வரிசையில், தற்போது ஒரு பெரும் மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ஒருவருக்கு ரூ.5,000-இன் நிதி உதவித் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் நாட்களில் அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆய்வுகள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், பொங்கல் பரிசுப் பொருட்களாக வழங்கப்படும் பொருட்கள் இல்லாமல், நேரடி பண உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தேரல் வெற்றியை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது திமுக அரசு என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
