தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்பட மானியம், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.