கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணுமூர்த்தி ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழாவில், ‘தெய்யம்’ எனப்படும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தபோது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது.

திரளான பக்தர்கள் சூழ தெய்யம் ஆட்டம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கையில், தெய்வ வேடமிட்ட கலைஞர் திடீரென கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பக்தரைத் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சற்றும் எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பக்தர் உடனடியாக அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட பிற பக்தர்கள் விரைந்து செயல்பட்டு மயங்கி விழுந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

“>

 

திருவிழாக் கூட்டத்தில் தெய்யம் வேடமிட்ட கலைஞரே பக்தரைத் தாக்கியதால் இளைஞர் மயங்கி விழுந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது