உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணை அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு  துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 26 ஆம் தேதி இளம் பெண் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அந்த இளம் பெண் தன் தாயாருடன் சென்று காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். ஆனால் சப் இன்ஸ்பெக்டர் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரதட்சணை புகார் கொடுக்க சென்றதற்காக திட்டியுள்ளார்.

அதோடு  விவாகரத்து செய்வதற்காக தொலைபேசியிலையே முத்தலாக் சொல்லியுள்ளார். இதனால் இளம்பெண் மிகவும் மன வேதனை அடைந்தார். இதனால் அந்த இளம் பெண் சம்பவநாள் இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் சப் இன்ஸ்பெக்டர் புகாரை ஏற்காதற்காக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அவர் புகாரை ஏற்காதது உறுதி செய்யப்பட்டதால் பின்னர் அந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும் அந்த இளம் பெண்ணின் கணவர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.