வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய புதுமணத் தம்பதியர் இடையே, நம்பிக்கைத் துரோகமும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளும் நிறைந்த ஒரு விவகாரம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான்சி அருகே உள்ள சிர்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், மத்தியப் பிரதேசத்தின் பண்டேர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜூன் 24-ஆம் தேதி வழக்கமான இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்து வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அந்தக் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
திருமணமான சில வாரங்களிலேயே கணவருக்குத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கவனித்துப் பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. திருமணத்திற்குப் பிறகு கடந்த இரண்டு மூன்று வாரங்களாகத் தனது மனைவி தனக்குத் தரும் பால், தேநீர் அல்லது உணவில் ரகசியமாகத் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து வந்ததாகக் கணவர் காவல்துறை புகாரில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, மனைவி தனியாக இருக்கும் நேரங்களில் ஒரு வாலிபர் வீட்டிற்கு வந்து செல்வதை அவர் கவனித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, அந்த நபர் வீட்டிற்கு வந்து சென்றதாக அயலவர்கள் கணவரிடம் கூறியுள்ளனர்; ஆனால், மனைவியிடம் கேட்டபோது அவர் அதனை மறுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அந்த நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததாகக் கணவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக வீடு திரும்பிய கணவர் கதவைத் திறந்தபோது, அங்கே தனது மனைவியும் அந்த இளைஞரும் ஆபாச கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
झांसी में पति को नशीली दवा देकर प्रेमी से बात करती थी पत्नी
पति का आरोप शादी के दो-तीन सप्ताह बाद से उसकी तबीयत खराब रहने पर हुआ शक
23 तारीख को घर पहुंचने पर पत्नी और प्रेमी को आपत्तिजनक हालत में देखा
पीड़ित पति नें SSP से बताया जान को खतरा#Uttarpradesh #Jhansi pic.twitter.com/pOFbCF06mF
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) August 25, 2026
அவர்களிடம் அவர் தட்டிக்கேட்டபோது நிலைமை கைமீறியுள்ளது. கணவன் எதிர்த்துப் போராடியபோது, மனைவி தனது கணவனின் கைகளைப் பிடித்துக்கொள்ள, அந்த மற்றொரு நபர் கணவனைத் தாக்கிக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். கணவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். உடனே காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வீட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் படுக்கையறையில் கணவனின் மனைவியும் அவரது காதலனும் அமர்ந்திருக்கும் காட்சிகளும், சுற்றிலும் பலர் கூடிநிற்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எனினும், இந்த வீடியோ மட்டும் சம்பவத்தின் முழுப் பின்னணியையும் அல்லது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையையும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை.
தமது உயிருக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்ற கணவர் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், கணவரின் புகாரை ஏற்றுக்கொண்டு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் மனைவி மற்றும் அவரது காதலன் மீதான தூக்க மாத்திரை விவகாரம், தாக்குதல் மற்றும் கள்ளத்தொடர்பு குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
