அரியானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரின் மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்த மகனே கொலையாளி என்பது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ள தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இந்தத் துயரமான சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் காதலுக்குத் தடையாக இருந்த தாயை ஒழித்துக்கட்டத் திட்டமிட்ட மகன், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மகனைத் தீவிரமாக விசாரணை செய்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதனால் பெற்றத் தாயையே மகன் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முறையான விசாரணைக்கு பிறகு இந்த கொடூரக் கொலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.