தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினமும் காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலாப் பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் சென்று முன் பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444  என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.ttdconline.com என்ற இணையதள முகவரியை அணுகலாம்.