நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

மயிலாடுதுறையில் ரூ 114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 12,653 பயனாளிகளுக்கு ரூ 655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்களின் கருத்துகளை அறிய சென்னையில் ‘நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்பார்கள்.

முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு கருத்தை கேட்டறிய உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரியதல்ல, அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது‌, பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என தெரிவித்தார்.