இந்தியாவில் அனைத்து விதமான சேவைகளும் தற்போது இணையமயமாகிவிட்ட நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கவும் புகார் குறித்த விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது தொலைந்து போன மொபைல் போன்களை குறித்து கண்டறியும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படும் விதமாக CEIR என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட நுழைவு ஐடி ஒன்று வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு துறையோடு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் புகார் அளிப்பவர்களுக்கு தங்களது தொலைந்து போன செல்போன் குறித்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இணையதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தொலைந்து போன செல்போனில் IMEI நம்பர் முடக்கப்படும் எனவும் வேறு ஏதாவது சிம் மூலமாக அந்த மொபைல் இணைக்கப்பட்டால் உடனடியாக தொலைத்தொடர்பு துறை மூலமாக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.