ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றது. அதன் பிறகு ஊழியரின் மருத்துவ அவசர நிலை மற்றும் சொத்து வாங்குதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக பிஎப் தொகையை பாதியிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு சில நேரங்களில் வேலையை விட்டு வெளியேற நேர்ந்தால் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி சேமித்த பணத்தில் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்றும் அதன் பிறகு இரண்டாவது மாதம் முடிந்தவுடன் 100 சதவீதம் பணத்தை திரும்ப பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் pf தொகையை பாதியிலேயே திரும்ப பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ஆன்லைன் மூலம் pf தொகையை பெற முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களது கோரிக்கையை முறையிட்டு பிஎஃப் தொகையை பெறலாம். இல்லையென்றால் EPFO அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அதற்கான படிவத்தை நிரப்பியும் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.