இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உண்மையான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ காட்சியை நினைவூட்டுகிறது. இதில் ஒரு பூனை, எலியை தொடர்ந்து தன் பாதத்தால் அடித்து, அடியோடு ‘துவைப்பது’ போல உள்ளது. பொதுவாக பூனைகள் எலியைப் பார்த்தவுடன் பாய்ந்து பிடிக்கும், ஆனால் இந்தப் பூனை வேகமாகவும், துல்லியமாகவும் எலியை அடித்து, அருகில் இருப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. எலி பாவமாக அடிகளை வாங்கி, ஒரு கட்டத்தில் முகத்தை சுவரை நோக்கி திருப்பி, மேலும் அடி வாங்காமல் தப்பிக்க முயல்கிறது. ஆனால், பூனை விடாமல் மீண்டும் அடிக்கத் தொடங்குகிறது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) October 9, 2025
இந்த 28 வினாடிகள் கொண்ட வீடியோ, எக்ஸ் தளத்தில் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்டு, 80,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். இதைப் பார்த்தவர்கள், “இது உண்மையான டாம் அண்ட் ஜெர்ரி ரீமேக்!” என்றும், “எலி பூனையின் பாலை திருடியிருக்க வேண்டும், அதான் இவ்வளவு அடி!” என்றும் கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர். மற்றொரு பயனர், “இந்த பூனையை குத்துச்சண்டை அரங்கத்திற்கு அனுப்ப வேண்டும்!” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.
