நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆஃபர் தந்து அழைக்கிறது. அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வராக உதவி செய்வதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் பணம் கொடுப்பதாகவும் குடும்பத்திற்கு தனி செட்டில்மெண்ட் செய்வதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நான் பிரபாகரனின் தம்பி என்பதால் அதையெல்லாம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நான் புது உத்தி வைத்துள்ளேன். இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் அந்த நேரத்தில் என்னை எதிர்த்து நிற்க முடியாது. உளவுத்துறை மூலமாக திமுக என்னுடைய கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது. திமுக என்னையும் என்னுடைய கட்சியையும் உடைப்பதற்கு நான் ஒன்றும் சிலேட்டு குச்சி கிடையாது. தன்னுடைய கட்சியில் இருக்கும் துரோகிகளை களை எடுத்து திமுக தனக்கு உதவி செய்கிறது. மேலும் அதற்காக நான் திமுகவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.