சென்னை அண்ணா நகரில் ரவுடி ராபர்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள், போலீசார் பாதுகாப்பில் சிறைக்குச் செல்லும் போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
போலீஸ் வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த ரவுடிகள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்போது அந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ரவுடிகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து போலீசார் என்றும் பாராமல் அவர்களை மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அதில், சிலர் வாகனத்தில் பின் பகுதியில் இருந்த போலீசார் அடிக்க முயன்றனர். அப்போது, போலீசாரை பார்த்து உன் முகத்தை நான் பார்த்து விட்டேன். வெளியே வந்தால் உன்னை வெட்டி கொலை செய்து விடுவேன் என்று பயங்கரமான முறையில் கொலை மிரட்டல் விடுகின்றனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.போலீசாரை ஆபாசமாக திட்டியும் தாக்க முயற்சித்த அதிர்ச்சி காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இது காவல்துறையின் கட்டுப்பாடும், சட்டத்தின் செம்மையான செயல்பாடும் கேள்விக்குறியாகியுள்ளது.
Under the DMK Govt, Rowdies rule the roost.
Seeing rogues abuse Policemen inside a police vehicle while being transported to prison only proves that these anti-social elements have no fear of the law.
Truly disheartening! pic.twitter.com/O3cKMfNPO1
— K.Annamalai (@annamalai_k) August 1, 2025
“>
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ தளத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறவில்லை, ரவுடிகள் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறையையே திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகள் சட்டத்தை பயப்படாமல் செயல்படுகிறார்கள்.
இது தமிழகத்தின் நியாய நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதுடன், சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
