தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைத்து கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீப காலமாக அதிமுகவிலிருந்து விலகி திமுக மற்றும் திமுகவிலிருந்து விலகி அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைவது உள்ளிட்ட செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதாவது கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவராக இருந்தவர் பரிதா நவாப். இவருக்கு எதிராக சமீபத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் வெற்றியடைந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் இன்று திமுகவிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் அவர் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.