பீகார் பகுதியில் உள்ள ஒரு திருமண விழாவிற்கு விசாரணைக்காகக் காவல்துறை வந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பெண்கள் அனைவரும் காவல்துறையினருக்கு முன்னால் தலைகுனிந்து நின்றிருக்க, அந்தப் பெண்ணின் 15 வயது மகன் கோபத்தில் வெடித்துள்ளார்.

தன் தாயின் கௌரவத்தைக் காப்பதற்காகத் தன் தோளிலிருந்த துண்டைக் கீழே வீசிய அந்தச் சிறுவன், “என் அம்மாவை நீங்கள் திட்டினால் உங்களை இங்கேயே துண்டு துண்டாக வெட்டித் தூக்கி எறிந்துவிடுவேன்” என்று அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அச்சிறுவனைச் சமாதானப்படுத்த முயன்ற போதிலும் அவன் அமைதியடைய மறுத்துக் காவல்துறையினரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெற்றோரின் கௌரவத்திற்காகக் குரல் கொடுத்த அந்த இளைஞனின் துணிச்சலைப் பாராட்டி சிலர் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், சட்டம் மற்றும் நிதானத்தின் மூலமே இதற்குப் பதிலளித்திருக்க வேண்டும் என்று வேறு சிலர் கூறி வருகின்றனர்.

“>

காவல்துறை அதிகாரிகளும்கூட சிறுவர்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விவாதத்தையும் இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.