தாம்பத்திய தனியறை நெருக்கத்தை வீடியோ எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்ததாக மனைவி அளித்த புகாரை, கணவர் சையது இனாமுல் மறுத்துள்ளார். மேலும், தனது மனைவியால் தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூருவில் உள்ள புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது பெண் ஒருவர் சமீபத்தில் அளித்த புகாரில், “படுக்கை அறையில் ரகசியமாக கேமரா பொருத்திய கணவர், தாம்பத்திய வீடியோவை பதிவு செய்து, அதைப் பிறரிடம் பகிர்ந்துள்ளார்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை ஆரம்பித்து, வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், 35 வயதான சையது இனாமுல், இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்து, ஒரு விளக்கவுரை வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “எனக்கு ஒரே ஒரு திருமணம் தான் நடந்துள்ளது. வேறு எந்த பெண்களுடனும் எனக்கு தொடர்பு இல்லை. என் மனைவியிடம் இருந்து ரூ.17 லட்சம் நஷ்டம் அடைந்துள்ளேன். திருமணத்திற்கு முன் அவருக்கு ரூ.13 லட்சம் வரதட்சணை கொடுத்தேன்.
திருமணத்துக்குப் பிறகு, தினமும் என் மனைவியே என்னை தாம்பத்தியத்திற்காக அழைத்துத் திருப்பித் திருப்பிச் சித்ரவதை செய்தார். அந்த சமயத்தில் அவர் மனநிலை சீராக இல்லாதவர் போல் நடந்துகொள்கிறார்,” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
