உத்திரப் பிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் சல்மான், என்பவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு. குஷ்னுமா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் மஹாக் (12), ஷிபா (5), அமான் (3) மற்றும் ஒரு மாத குழந்தை இனைஷா என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இதில் குஷ்னுமா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவருக்கு தெரிந்த நிலையில் தன் மனைவியிடம் கேட்டு பலமுறை சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் கடந்த வெள்ளிக்கிழமை ஓடி விட்டதால் மனம் உடைந்த சல்மான் நேற்று தன்னுடைய நான்கு குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்த தற்கொலை செய்து கண்டார்.
இதற்கு முன்பாக தன்னுடைய செல்போனில் தன்னுடைய இந்த முடிவுக்கு மனைவியும் கள்ளக்காதலனும் தான் காரணம் எனக் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் இவர்களது சடலங்களை தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
