இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு நபர் ஒரு தேனீயை பிளாஸ்டிக் கப்பில் அடைத்து, அதற்குள் சிகரெட் புகையை செலுத்துகிறார். கப் முழுவதும் புகை நிரம்ப, தேனீ துடிதுடிப்பதை காணொளி காட்டுகிறது. ஒரு கட்டத்தில், தேனீ மிகவும் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுகிறது. பின்னர், கப்பை திறந்து பார்க்கும்போது, தேனீ தப்பிக்கும் நிலையில் இல்லை.
இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற செயல்கள் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், பலர் இதைக் கண்டித்து, விலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விவாதித்து வருகின்றனர்.
