தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாமன்ற உறுப்பினர் ராஜன் பர்ணபாஸ், புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எல்.பெரியசாமி மற்றும் ஓய்வுபெற்ற ஐஜி ராமச்சந்திரன் ஆகியோர் தவெக-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர்கள், தவெக உயர் மட்டக் குழுத் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூகக் குழுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.
தவெகவில் இணைய கட்சி அலுவலகம் வருகை தந்த புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் காவல்துறை அதிகாரி.. ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதால் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைய போவதாக பேட்டி#chennai | #TVKVijay | #tvk | #PolimerNews pic.twitter.com/aDT0TDPfFZ
— Polimer News (@polimernews) January 4, 2026
“>
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று மாலை கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைத்துக் கொள்ள உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனுபவம் வாய்ந்த நபர்கள் தவெக-வில் இணைவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
