கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனியரசு, விஜய் பாஜகவின் ‘செல்லப்பிள்ளையாக’ செயல்பட்டு வருவதாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகளுக்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பாஜகவே கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அதிமுகவின் இடத்தைப் பிடிப்பதற்காக விஜய்யை முன்னிறுத்தும் வேலைகளை பாஜக செய்து வருவதாகவும், அதற்காகவே மூத்த தலைவர் செங்கோட்டையனை பாஜக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
