ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இணைவதாக சிஎஸ்கே நிர்வாகம் இன்று (நவம்பர் 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், சிஎஸ்கே அணியில் ரூ.18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டிருந்த இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். டோனியின் இடத்தை நிரப்பும் வகையிலும், விக்கெட் கீப்பர் பேட்டரைத் தக்கவைக்கும் நோக்கிலும் சிஎஸ்கே நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
