எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் உச்சநீதிமன்றம் அதிரடியான ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ (Work From Home) திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, இனி வரும் காலங்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடியோ கான்பரன்சிங் (Video Conferencing) மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் எனவும், நீதிமன்றப் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் இந்த அதிரடி மாற்றத்தால் எரிபொருள் மிச்சமாவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
