லக்னோவில் 24 வயது இளம்பெண் யாஸ்மின், தனது கணவர் அல்தாஃப் என்பவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இருந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அல்தாஃப், மே 14 அதிகாலை 4 மணியளவில் அவரைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை ஒரு ட்ராலி பேக்கில் அடைத்து ரிக்ஷா மூலம் அணைப் பகுதிக்குக் கொண்டு சென்று புதரில் வீசியுள்ளார். கொலைக்குப் பிறகு, ஒன்றும் தெரியாதது போல காவல் நிலையம் சென்று தனது மனைவியைக் காணவில்லை என்று அல்தாஃப் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அல்தாஃப் அளித்த தகவலின் பேரில் போலீசார் அணை அருகே இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
