தனியார் பேருந்து ஓட்டுநரான மனோஜ், பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றபோது அவருக்குத் திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியால் துடித்த போதிலும், தனது கட்டுப்பாட்டை இழக்காமல் சாதுரியமாகச் செயல்பட்ட அவர், பேருந்தை உடனடியாகச் சாலையோரம் நிறுத்தி இன்ஜினை அணைத்துள்ளார். இதன் மூலம் பேருந்தில் இருந்த ஒட்டுமொத்த பயணிகளின் உயிரையும் அவர் மயிரிழையில் காப்பாற்றினார். பேருந்தை நிறுத்திய அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் நிலைகுலைந்து சரிந்தார்.
தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உடனே சாலையோரம் பேருந்தை நிறுத்தி ஒட்டுமொத்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்#Karur | #Bus | #Driver | #PolimerNews pic.twitter.com/ukmU85U7rv
— Polimer News (@polimernews) April 18, 2026
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கடைசி மூச்சு வரை சக மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஓட்டுநர் மனோஜின் இந்த வீர மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதே சமயம் அவர் மீதான பெருமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “நிஜமான ஹீரோக்கள் சீருடை அணிந்து வருவார்கள்” என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த மனோஜின் வீடியோவும் செய்தியும் தற்போது இணையத்தில் கலங்க வைத்து வருகிறது.
