சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் நம் இதயத்தையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும். அந்த வகையில், கட்டிடத்தின் உயரமான பால்கனி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறு குழந்தை அந்தரத்தில் தொங்கும் பகீர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

எந்த நேரத்திலும் குழந்தை கீழே விழுந்துவிடும் என்ற பதற்றமான சூழலில், திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் பால்கனிக்குள் பாய்ந்து அக்குழந்தையை பத்திரமாகத் தூக்கி அணைத்துக்கொண்டது.

 

View this post on Instagram

 

A post shared by મોજીલો વાંદરો (@mojilo_vandro)

ஒரு திரைப்படக் காட்சியைப் போலவே அரங்கேறிய இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்தக் குரங்கு வடிவில் கடவுளே வந்து குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் இது உண்மையான வீடியோவா அல்லது ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்ற விவாதமும் ஒரு பக்கம் சூடாக நடந்து வருகிறது. எது எப்படியோ, ஆபத்தில் இருந்த ஒரு உயிர் காப்பாற்றப்படும் இந்த வீடியோ காண்பவர் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.