விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து, அவரது மகள் மேற்கொண்ட உணர்ச்சிகரமான பிரச்சாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேடையில் பேசிய அவர், “அப்பா டயர்டா வீட்டுக்கு வரும்போது ‘ரெஸ்ட் எடுங்கப்பா’ அப்படின்னு சொன்னா, ‘எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாமா, என் மக்களுக்கு நான் பெஸ்ட் கொடுக்கணும்’னுதான் சொல்லுவாரு” எனத் தனது தந்தையின் மக்கள் பற்றைக் குறித்து உருக்கமாகப் பேசினார்.
"வீட்டுக்கு வரும் போது ரெஸ்ட் எடுங்கப்பானு சொல்வேன் அதுக்கு அவரு எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேணாம் மா என் மக்களுக்கு பெஸ்ட் கொடுக்கணும்னு சொல்வாரு.. அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அவரது மகள்..!#AIADMK | #CVijayaBaskar | #Daughter | #ElectionCampaign |… pic.twitter.com/wcBpetZEfx
— Polimer News (@polimernews) April 18, 2026
வீட்டிற்கு வந்தாலும் ஓய்வெடுக்காமல் தொகுதி மக்களுக்காகவே சி.விஜயபாஸ்கர் உழைப்பதாக அவரது மகள் பேசியது வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே காவிரி நீர் மற்றும் மலைப்பாதை போன்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ள தனது தந்தைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். தந்தையின் அர்ப்பணிப்பை மகள் வெளிப்படுத்திய விதம், அரசியல் களத்தில் ஒரு நெகிழ்ச்சியான வைரல் வீடியோவாக மாறியுள்ளது.
