தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். இந்நிலையில் அதுகுறித்து தற்போது ட்வீட் செய்துள்ளார்.
அதில் ‘திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை. திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை மாற்றமும், வெளிப்படைத்தன்மையும் சாத்தியமில்லை. திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம்’ என விளக்கியுள்ளார்.
