
திசையன்விளை அருகே கடலில் குளித்த போது உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்..
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், த/பெ. செல்வராஜ் (வயது 14), திரு. ராகுல் கண்ணன், த/பெ. இசக்கியப்பன் (வயது 14) மற்றும் முகேஷ், த/பெ. மகாலிங்கம் (வயது 13) ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் நேற்று (15 -8 -2003) கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/9wBQFFHX9O
— TN DIPR (@TNDIPRNEWS) August 16, 2023