செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ் தலைவர்களும் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே பேசினாலும் எதிர்க்கட்சிகளை வசை பாடிக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

ரெண்டேகால் மணி நேரம் நாடாளுமன்றத்திலேயே நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை ஒரு ஆங்கில நாளேடு கிண்டலடித்து தலைப்புச் செய்தி போட்டிருந்தது ?  பிரதமர் பேசியது ப்ளா ப்ளா ப்ளா என்று முழுக்க அத்தனை காலத்திலும் பிலா பிலா என்று போட்டு பதிவு செய்திருந்தது.

ஒரு பிரதமரை இந்த அளவுக்கு வேறு எந்த ஊடகமும் – எந்த நாட்டிலும் கேலி செய்திருக்க முடியாது. பிரதமர் உளறுகிறார். இரண்டே கால் மணி நேரமும் உளறினார்..  அவர் பேசியதில் எதுவுமே இல்லை என்று ஊடகம் அவரை கேலி செய்யக்கூடிய அளவுக்கு பிரதமரின் நிலை இருக்கிறது. அவர்களின்  நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.

அவர்கள் அந்த ஆட்சி பீடத்தில் இருந்து எந்த இந்து மக்களை தங்களின் வாக்கு வங்கி ஆதாரம் என்று நம்பி இருந்தார்களோ,  அதே இந்து சமூகத்தைச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் விரட்டியடிக்க போகிறார்கள் என்பதுதான் வரலாறு ஆகப்போகிறது என தெரிவித்தார்.